Terbaru

facebook like

Popular Posts

Random Post

சனி, 18 பிப்ரவரி, 2012

இஸ்லாமிய வரலாறு கண்ட மாபெரும் தளபதி ஸலாஹுதீன் ஐயூபி


சுல்தான் ஸலாஹுதீன் ஐயூபி இஸ்லாமிய வரலாறு கண்ட மாபெரும் தளபதி ஒட்டுமொத்த மத்திய ஆசியாவையும் கைப்பற்றி சிதறிகிடந்த முஸ்லிம் நாடுகளை ஒன்றிணைத்து ஒரு இஸ்லாமிய சாம்ராச்சியத்தை உருவாக்கிய இஸ்லாமிய வரலாறு கண்ட வெற்றி தளபதிகளில் ஒருவர் மூன்றாவது சிலுவைப்போரில் எதிரிகளுக்கு தகுந்த பாடம் புகட்டி எதிரி கைப்பற்றிய மஸ்ஜிதுல் அக்சாவை மீண்டு கைப்பற்றி எதிரிக்கு தோல்விகளை விதியாக மாற்றியவர் அனால் இன்று அந்த மஸ்ஜிதுல் அக்சா மீண்டும் எதிரி கைபற்றிகொண்டான் இந்த நிலையில் தளபதி சுல்தான் ஸலாஹுதீன் பற்றிய ஒரு சிறு ஆவணப்படம்.
Advertisement

புதன், 24 ஆகஸ்ட், 2011

சிலுவை யுத்தம் ஒரு வரலாற்று பார்வை (பகுதி 1)

-M.ரிஸ்னி முஹம்மட்-
பல நூற்றாண்டுகளாக உலகின் வளர்ச்சி பெற்றுவரும் இஸ்லாமிய எழுச்சியை தடுத்து அரசியல் நியாயாதிக்கம் பெற்றுவரும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை அழிக்க வேண்டும் அதற்கு பதிலீடாக கிறிஸ்தவ மத அரசு ஒன்றை நிறுவ வேண்டும் என்ற கிறிஸ்தவ கத்தோலிக்க சமுகத்தை ஐரோப்பாவின் பல போப்பாண்டவயர்கள் உணர்வூட்டி வந்தார்கள் எனிலும் பறந்து விரிந்து வியாபித்திருந்த முஸ்லிம் சாம்ராஜ்யத்தை தாக்குவது என்பது அன்று அவ்வளளவு இலகுவான விடையமான இருக்கவில்லை ஐரோப்பா அன்று எந்த அபிவிருத்தியும் காணாத இருண்ட கண்டமாக இருந்தது.
ஒரு இருண்ட கண்டம் எப்படி அணைத்து அறிவியல் துறைகளிலும் முன்னேரிகொண்டிருந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை தாக்கமுடியும் அதனால் சரியான சந்தர்பம் பார்த்து இருந்தது கிறிஸ்தவ உலகம் – கி.பி. 1095-ம் ஆண்டு. போப்பாண்டவராக பதவிக்கு வந்த ஏர்பன் II- Pope Urban II at the Council of Clermont – முஸ்லிம்களை தாக்கி இஸ்லாத்தை வீழ்த்த தகுதியான சந்தர்பமாக கி.பி. 1095-ம் ஆண்டு கால பகுதியை கண்டார் , முஸ்லிம்கள் தமக்குள் மோதிக்கொண்டனர், இஸ்லாம் வணக்க வழிபாடுகளில் மட்டும் பிரகாசித்தது அரசியல், பொருளாதார சமுக கட்டமைப்பு விடையங்களில் பலம் இழந்து கொண்டிருந்தது விரிவாக பார்க்க
அரச தலைவர்கள் தாம் இறைவனின் அடிமைகள் என்பதை மறந்து, சுய இலாபம் கருதி செயல் பட்டுகொண்டிருந்தார்கள் பல நூற்றாண்டு கடின உழைப்பின் விளைவாக அறிவியல், விஞ்ஜானம், பொருளாதாரம் , அரசியல் , இராணுவம் போன்ற துறைகளில் உயர்ந்த இருந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை உள்ளிருந்து முஸ்லிம் பெயர் தாங்கிகளும், யூதர்களும் அழித்து கொண்டிருன்தனர் இதை சிறந்த சந்தர்பமாக அனுமானித்த ஏர்பன் II முஸ்லிம்களுக்கு எதிரான யுத்தத்துக்குத் தயாராகும்படி ஒட்டுமொத்த ஐரோப்பா கிறிஸ்துவ சமூகத்தினருக்கும் அழைப்பு விடுத்தார் இந்த யுத்தத்துக்கு சிலுவை யுத்தம் என்று பெயரிட்டார் – The pope called for a “War of the Cross,” or Crusade, to retake the holy lands from the -ஜெருசலத்தை முஸ்லிம்களிடம் இருந்து கைப்பற்ற வேண்டும். இயேசுவின் மரண சுவடுகள் உள்ள பகுதி கிறிஸ்துவர்களின் நிலமாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற இலக்குடன் கிறிஸ்தவ இராணுவம் தயாரிக்கபட்டது.
அந்த கிறிஸ்தவ இராணுவம் ஐரோப்பிய நாடுகளில் இருந்த ஜெருசலம் நோக்கி பாய்ந்தது இதன் பிரதான நோக்கமாக எழுச்சி பெற்று வரும் இஸ்லாத்தை இராணுவ , அரசியல் தளங்களில் தோற்கடிப்பதும், ஆசியாவில் கத்தோலிக்க கிருஸ்தவ மேலாதிக்கத்தை நிறுவி ஐரோபாவின் கட்டுபாட்டில் முஸ்லிம் தேசங்களை கொண்டுவருவதுமாகும் இவரின் அழைப்பு ஐரோப்பிய அரசர்களின் கவனத்தை பெற்றது அன்று அரசர்களின் அரசராக போப் அதிகாரம் பெற்றிருந்தார் . அரசுத்தரப்புப் பிரதிநிதிகள் கலந்து விவாதித்தார்கள்.
ஒட்டுமொத்த கிறிஸ்துவ தேசங்களும் இந்தப் புனிதப்போரில் பங்காற்றியே ஆகவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது 11 நூற்றாண்டின் இறுதியில் கிறிஸ்தவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த போர் 300 ஆண்டுகள் தொடர்ந்த நடைபெற்றுள்ளது.
ஜெருசலத்தை மையமாக வைத்து கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஆரம்பமான இந்த போரை வரலாறு மிக கொடிய போராகவும் கிருஸ்தவ படைகள் முஸ்லிம் பெண்களையும் சிறுவர் சிறுமிகளையும் படு பயங்கரமாக கொன்ற யுத்தமாக குறிபிடுகின்றனர் இந்த யுத்தம் மூன்று கட்டங்களாக நடை பெற்றது முதல் சிலுவைப்போரில் கிறிஸ்தவ உலகம்  ஜெருசலத்தை  கைப்பற்றியது இரண்டாவது போரில்  கட்டத்தில் சுல்தான் ஸலாஹுதீன் ஐயூபி தலைமையில் ஜெருசலம் மீட்கபட்டது இவர் இஸ்லாமிய வரலாறு கண்ட மாபெரும் தளபதி களில் முக்கியமானவர் இவர் ஒட்டுமொத்த மத்திய ஆசியாவையும் கைப்பற்றி சிதறிகிடந்த முஸ்லிம் தேசங்களை ஒன்றிணைத்து மீண்டும் இஸ்லாமிய சாம்ராச்சியத்தை உருவாக்கிய இஸ்லாமிய வரலாறு கண்ட வெற்றி தளபதிகளில் ஒருவர்  இரண்டாவது சிலுவைப்போரில் எதிரிகளுக்கு தகுந்த பாடம் புகட்டி எதிரி கைப்பற்றிய மஸ்ஜிதுல் அக்சாவை மீண்டு கைப்பற்றி எதிரிக்கு தோல்விகளை விதியாக மாற்றியவர் இவர் ஒரு அரபியோ அல்லது அன்று கிலாபத் நிர்வாகத்தில் இருந்த துருகியரோ அல்ல இவர் ஒரு அஜமி கேட்- Kurdish- என்ற ஒரு மொழி பேசக்கூடியவர் என்பது குறிபிடதக்கது மூன்றாவது சிலுவைப்போரில் எதிரி ஜெருசலத்தை கைப்பற்றினான்
முதல் சிலுவை யுத்தத்தை பலர் தலைமை தாங்கியுள்ளனர் இவர்களில் முக்கியமானவர் பீட்டர் – Peter the Hermit- என்கிற பாதிரியார் இவர் தலைமையில் யுத்தம் ஆரம்பமானது  இவர்தான் முதல் சிலுவைப் போருக்குத் தலைமை தாங்கினார் கி.பி. 1096-ல் மத்திய ஐரோப்பாவிலிருந்து பல பிரிவுகளை கொண்ட படைகளாகப் புறப்பட்டடு திரண்ட படையாக ஜெருசலத்தை நோக்கி முன்னேறத் தொடங்கிய படைகளுக்கு உந்து சக்தியாக இருந்தவர். இவரின் தலைமையில் படைகள் ஐரோப்பாவிலிருந்து 3000 மைல்களுக்கு அப்பால் உள்ள ஜெருசலத்தை நோக்கி திரண்டு குவிந்தது அன்றைய கலீபாவாக இருந்த அல் முஸ்தசிர் பிலாஹ், பாலஸ்தீனை நோக்கிப் போகும் அனைத்து வழிகளையும் தனது படைகளை கொண்டு அடைத்தார், எந்த இடத்தை நோக்கி வந்தாலும் ஜெருசலத்தை நெருங்க விடாமல் எதிரி படைகளை கடுமையாக தாக்கப்பட்டனர்.
இந்த போரில் கிறிஸ்துவர்களின் மாபெரும் தளபதி என்று வருணிக்கப்பட்ட வீரர் ரெஜினால்ட் – உள்பட பெரும்படையணி முஸ்லிம்களிடம் சரணடைந்தது. இவர்களில் பலர் பின்னர் இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டனர் தமது இராணுவத்தின் முக்கியத் தளபதி உள்ளிட்ட பெரும்படை சரணடைந்துவிட்டதால் கிறிஸ்தவ இராணுவம் நிலைதடுமாறியது ஜெருசலேத்தை கைப்பற்றும் எண்ணத்தை கைவிட்டு தாம் தப்பினால் போதும் என்று கருதிய கிறிஸ்தவ படைகள் ஓட்டம் எடுத்தது முதல் சிலுவைப்போரின் முதல் கட்டம் கிறிஸ்துவர்களுக்கு படு தோல்வியில் முடிந்தது.
இதனால் ஆத்திரமும் அவமானமும் கொண்ட ஐரோப்பிய நாடுகள் இரண்டாவது முறையாக ஒரு ஜெர்மானிய திருச்சபைத் தலைவரின் தலைமையில் இன்னொரு பெரிய படையை ஜெருசலேத்தை நோக்கி அனுப்பியது ஆனால் இந்தப் படையால் ஐரோப்பிய தேசமான ஹங்கேரியைக் கூடத் தாண்டமுடியவில்லை. உள்மோதல் ஒழுக்கம் இன்மை காரணமாக ஹங்கேரி படைகளுடன் மோதி தோற்றுப்போனது அதை தொடர்ந்து கி.பி. 1097-ல் ஐரோப்பிய நாடுகளின் கிறிஸ்தவ அரசர்கள் கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது முஸ்லிம்களிடமிருந்து ஜெருசலத்தை கைப்பற்றுவது இந்தக் கூட்டமைப்பின் பிரதான திட்டமாக அமைந்தது
கிறிஸ்தவ அரசர்கள் அமைப்பால் சுமார் ஏழரை லட்சம் நபர்களை கொண்ட இராணுவத்தை திரட்டினார்கள் இந்த படை ஜெருசலத்தை கைப்பற்றுவது என்கிற இலக்குடன் அனுப்பப்பட்ட சிலுவை இராணுவம் இது துருக்கியில் உள்ள அண்டியோச்சை -Antioch- முற்றுகையிட்டது இந்த நகரம் மிக பலமான கோட்டை ஒன்றுக்குள் மிகவும் பாதுகாப்பாக அமைந்து இருந்தமையால் சிலுவை படைகளின் சுற்றிவளைப்பு முற்றுகை சுமார் எட்டு மாதங்களுக்கு மேலாகத் தொடர்ந்ததும் நகரை வெற்றிகொள்ள முடியவில்லை சிலுவை படைக்கு உணவு போதாமை ஏற்பட்டது இதனால் இறந்தவர்களின் மற்றும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் மனித மாமிசத்தை சமைத்து உண்டது கிறிஸ்தவ படை இந்த சம்பவம் எந்த அளவு இரத்த வெறியுடன் சிலுவை இராணுவம் இருந்தது என்பதை காட்டுகின்றது.
இந்த நிலை தொடரும்போது துருக்கியின் வடபகுதியில் இருந்து முஸ்லிம் இராணுவம் ஒன்று நகரை பாதுகாக்க புறபட்டடுள்ளது என்ற தகவல் சிலுவை படைக்கு எட்டியது அதேவேளை அண்டியோச் நகர கோட்டையின் தளபதியாக இருந்த பைரூஸ் என்பவன் சிலுவை படைக்கு விலைபோனான் கோட்டைக்குல் கிறிஸ்தவ சிலுவை படை நுழைய தேவையான துரோகத்தை செய்தான் கோட்டைக்குள் நுழைந்த சிலுவை படை பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை வெட்டி வீழ்த்தியது . அதை தொடர்ந்து வெற்றி வெறியுடன் தொடர்ந்தும் ஜெருசலத்தை நோக்கி முன்னேறிச் சென்றது
இரண்டாவது சிகப்பு சிலுவைப் படை ஜெருசலத்தை சுற்றிவளைத்தது கண்களில் பட்ட முஸ்லிம்கள் அனைவரையும் வெட்டி வீசியது முஸ்லிம் புத்திஜீவிகளை பிடித்து அவர்களை கால்களை இரண்டு குதிரைகளில் கட்டி குதிரைகளை இரண்டு திசை களில் வேகமாக ஓட்டி இரண்டு துண்டுகளாக கிழித்து போட்டது பெண்களை கூட்டம் கூட்டமாக கற்பழித்தது சிறுவர்களை தூக்கி விசி அடித்து கொன்றது. முஸ்லிம் படை செயல் இழந்தது முஸ்லிம்கள் மஸ்ஜிதுல் அக்சாவுகுள் Dome of the Rock, the mosque of al-Aqsa- நுழைந்து அபயம் தேடினர் அங்கும் கதவுகளை உடைத்து கொண்டு சிலுவைகளுடனும் பைபில்களுடனும் நுழைந்த சிலுவை படை எவரையும் உயிருடன் விடவில்லை அனைவரையும் கொன்றது கணவன் முன் மனைவியை கூட்டு பாலாத்காரம் செய்தது தாயிடமிருந்து சிசுக்களை பறித்து எடுத்து மஸ்ஜிதின் தூண்களின் மீது சிசுக்களின் தலைகளை அடித்து சிதறடித்து மேற்கு வரலாற்றின் பிரகாரம் ஜெருசலத்தில் எந்த முஸ்லிமும் இல்லாது அழிக்கபட்டனர் கிறிஸ்தவ படைகள் சென்ற இடமெல்லாம் மனித உடல்கள் குவிந்து கிடந்தது என்று வரலாறு கூறுகின்றது.
முஸ்லிம்களை வயது வித்தியாசம் இன்றி கொல்வதை கிறிஸ்தவ ஆன்மிக பலம் பெற உதவும் என்று கருதினர் வயோதிபர்கள், நோயாளிகள் , குழந்தைகள் , பெண்கள் என்ற எந்த வேறுபாடும் இருக்கவில்லை லட்சகணக்கில் முஸ்லிம்கள் கொல்லப்படனர் சொத்துகள் அனைத்தயும் கொள்ளையிடப்பட்டது முஸ்லிம்களில் அறிவியல் கண்டுபிட்புகள் அனைத்தும் களவாட பட்டது பிரமாண்டமான பல நூல் நிலையங்கள் எரித்து அழிக்கப்பட்டது அங்கு இருந்த லட்ச கணக்கான அறியியல் விஞ்ஜான நூல்கள் அழிக்கப்பட்டது
ஜெருசலத்தின் மஸ்ஜிதுகளில் கிறிஸ்தவ இராணுவத்தின் குதிரைகளின் அரைவாசிக் கால்கள்- முழங்கால் -புதையும் அளவுக்கு முஸ்லிம்களின் இரத்தம் ஓட்டப்பட்டுள்ளது என்று வரலாறு பதிய தவறவில்லை இவ்வாறு சிலுவை படைகள் ஜெருசலத்தை கைப்பற்றி இரண்டாம் சிலுவை போரில் வெற்றி பெற்றது இத்தனையும் நடைபெறும்போது முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் கலிபா அழுதுகொண்டிருந்தார் என்பது உண்மையான வரலாறு நிர்வாக தவறுகளை யார் விட்டாலும் அதன் விளைவு மிக பெரியதாக இருக்கும் என்பதை தான் இந்த சம்பவம் எடுத்து காட்டுகின்றது.
இன்ஸா அல்லலாஹ் தொடரும்….
-லங்காமுஸ்லிம்-
__

புதன், 3 ஆகஸ்ட், 2011

பஹ்ரைன் நிலவரம் ஒரு திறந்த வாசிப்பு

April 9, 2011
அரேபிய வளைகுடாவின் முத்து என அழைக்கப்படும் பஹ்ரைன் புரட்சியின் நோக்கம் பின்னணி அதன் உண்மை நிலவரங்கள் பற்றிய தகவல்களை தேடுவதும் எழுதுவதும் மிகச் சிரமமான விடயம். சீயாக்களின் ஊடகச் செய்திகள், மேற்கத்திய ஊடகங்களின் செய்திகளுக்கும் அதை கொஞ்சம் மெருகூட்டி வழிமொழியும் அல் ஜஸீராவின் தகவல்களுக்கு மத்தியிலும் இயக்க உணர்வின் பின்னணியில் பக்க சார்பு செய்திகளையும் நடுநிலையான பார்வையுடன் சாதக பாதகம் பார்க்காமல் செய்திகளை வழங்கும் மத்திய கிழக்கு அரபு ஊடகங்களுக்கு மத்தியிலும் பெப்ரவரி14ம் திகதி தொடங்கி இன்று வரை நீடித்திருக்கும் பியரல் சதுக்கத்தில் ஆரம்பித்த புரட்சியின் உண்மை நிலையை தேர்ந்து தருவது ஒரு கடினமான காரியம். யூடியுபின் க்ளிப்களை வைத்தோ சில பிரபல்ய ஊடகங்களின் தகவல்களை மாத்திரம் வைத்தோ எந்த அவசர முடிவிற்கும் யாரும் வந்துவிடக் கூடாது என்பதற்கு பஹ்ரைன் நிலவரம் பெரியதொரு ஆதாரம். கூகுல் ஏத் கூட இந்த ஆர்ப்பட்டத் தூண்டுதல் சக்தியாக செயல்பட்டுள்ளது.என்றாலும் பெப்ரவரி 14ம் திகதியிலிருந்து இன்றுவரை அனைத்து செய்தி ஊடகங்களிலும் இப்புரட்சியை அவதானித்தவர்களுக்கும் பஹ்ரைனின் வரலாற்றுப் பின்னணியை சரியாக அறிந்திவர்களுக்கும் இப்புரட்சியில் இன்று நடப்பதென்ன என்ற முடிவிற்கு ஓரளவு வரலாம்.
அரேபிய வளைகுடாவா?பாரசீக வளைகுடாவா?
அரேபிய வளைகுடாவா?பாரசீக வளைகுடாவா? என்ற பிரச்சனை இன்று வரை சிக்கலான முடிவு காணப்படாத ஒன்றாய் இருப்பதை அவதானிக்கலாம். ஈரானிய செய்திஸ்தாபனங்களும் சீயா சார்பு ஊடகங்களும் இன்னும் பெரும்பாலான மேற்கத்தேய ஊடகங்களும் பாரசீக வளைகுடா என்ற வழக்கை பயன்படுத்தும் அதே நேரம் மத்திய கிழக்கு ஊடகங்களும் மற்றும் அரேபிய ஊடகங்களும் அரேபிய வளைகுடா என்ற வழக்கையே பயன்படுத்தி வருகின்றன.பழங்கால வரைபடங்களில் இருவிதப் பயன்பாட்டையும் காண முடிகிறது. இந்தப் பிரச்சனைக்குப் பின்னால் வளைகுடா மற்றும் அதன் தீவுகளின் நலவுகளில் அதிக கவனம் செலுத்தும் தகைமை யாருக்கு உண்டு என்கின்ற குறைத்து மதிப்பிட முடியாத ஒரு உரிமைப் பிரச்சினை இருப்பதே இதற்குக் காரணம்.ஆனாலும் வளைகுடா பாரசீக என்கின்ற எச்சத்தைக் கொண்டாலும் அரேபிய என்கின்ற எச்சத்தைக் கொண்டாலும் இட அமைவு ரீதியாக அரேபிய தீபகற்பத்தோடு அது கட்டுண்டிருப்பது மறுக்க முடியாத ஓர் உண்மை. வளைகுடா கூட்டுறவு அமைப்புடன் பஹ்ரைன் இணைந்ததும் 1780களிலிருந்து ஜுமைலாக் கோத்திரப் பிரிவின் ஒரு பகுதியான ஆலு கலீபாக்களின் ஆட்சி அங்கு நீடித்திருப்பதும் இதை உறுதி செய்கிறது. தேசிய மொழியாக வளைகுடாத் தீவுகளின் முத்தான பஹ்ரைனில் அரபு மொழி இருந்துவருவதும் இதை வலுப்படுத்துகிறது எனலாம். முலர் மற்றும் அப்துல் கைஸ் என்ற அரபு அத்னானியாக் கோத்திரங்கலே பஹ்ரைனின் மூல குடிகள் என்பதும் இதற்கு இன்னும் வலு சேர்க்கிறது.
அன்றைய அவாலும் இன்றைய பஹ்ரைனும்
அரேபிய வளைகுடாக் கடலின் முக்கிய தீவுக் கூட்டங்களாக இருக்கும் ஒரு நிலப்பரப்புக்கு இன்று பஹ்ரைன் என்று வழங்கப்பட்டாலும் ஆரம்பத்தில் ஆதிகால விரிந்த பஹ்ரைனின் ஒரு பகுதியாகவே இது காணப்பட்டது. அரேபியர்களால் அவால் என்ற பிரதேசமாக அன்று அறியப்பட்டதே இன்றைய பஹ்ரைன். அன்று அவால் விரிந்த பஹ்ரைன் என்ற நிலப்பரப்பின் ஒரு நாடுதான். அன்று விரிந்த பஹ்ரைனாக அறியப்பட்டது. வடக்கில் பஸராவையும் தெற்கில் ஓமானையும் எல்லையாகக் கொண்ட அஹ்ஸா, கதீப், கத், ஹஜர் போன்ற இன்றைய ஸஊதியின்  பெரும் கிழக்குப் பிரதேசங்களையும் அதன் கிழக்குக் கரையோரத்தோடு நிலத்தால் இன்றைய அமைவை விட அன்று நெருங்கியிருந்த அவாலும் சேர்ந்ததே அன்றைய பஹ்ரைன். அதாவது ஸஊதியின் இன்றைய கிழக்குமாகாணமும் அன்றைய பஹ்ரைனாக இருந்தது. அவால் என்ற பெயர் அவர்களன் இஸ்லாத்திற்கு முன் வணங்கிய சிலையை மையமாக வைத்து உருவானதாகும். அதே நேரம் இன்றைய பஹ்ரைன் முழுவதற்கும் அந்தப் பெயர் வழங்கப்பட்டதாகச் சொல்ல முடியாது. கிரேக்கர்கள் இந்தத் தீவுக் கூட்டத்தைக் கண்டுபிடிக்க எடுத்த முயற்சியில் இன்றைய பஹ்ரைனில் மிகப்பெரிய தீவாக உள்ள பஹ்ரைன் மாநிலத்திற்கு தாய்லூஸ் என்றும் இன்னொரு மாநிலமான முஹர்ரகிற்கு அராதூஸ் என்றும் வழங்கியுள்ளார்கள்.இன்றுங் கூட முஹர்ரக் மாநில தீவின் முக்கிய நகரம் அராத் என்று அழைக்கப்படுகிறது.
நபிமொழிக் கிரந்தங்களிலும் ஆரம்ப இஸ்லாமிய வரலாற்று நூல்களிலும் பஹ்ரைன் என்ற சொல் விரிந்த பஹ்ரைனிற்கே பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம். இஸ்லாத்தின் மிக முக்கிய கூட்டுக் கடமையில் ஒன்றான வெள்ளிமேடை பிரசங்கம் மதீனாவிற்குப் பின் இரண்டாவதாக நடத்தப்பட்ட பிரதேசம் பஹ்ரைனின் ஜுவாஸா பிரதேசத்திலே உள்ள அப்துல் கைஸ் கோத்திரத்தினரின் பள்ளிவாயலிலேயே (புகாரி: 4371) இந்தச் செய்தியில் வரும் பஹ்ரைன் பிரதேசத்தின் ஜுவாஸா என்பது ஸஊதியின் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் அஹ்ஸா என்ற பெரும் பிரதேசத்தின் ஒரு மிக முக்கியமான கோட்டையைஉ ள்ளடக்கிய கிராமமாகும். அந்தப் பள்ளிவாயலின் அத்திவார அடையாளங்கள் இன்றும் உள்ளன என பல புகைப்படங்கள் சொல்கின்றன. நபியவர்களின் காலத்தில் இந்த பரந்த நிலப்பரப்பில் பாரசீகக் கிஸ்ராவின் காலணித்துவம் ஆட்சி செய்துகொண்டிருந்தது. நபியவர்கள் கிஸராவின் பிரதிநிதியாக அன்றைய பஹ்ரைனில் ஆட்சி பீடம் ஏறியிருந்த மன்னருக்கு இஸ்லாத்தை ஏற்குமாறு கடிதம் எழுதியனுப்பினார்கள். அதை அவர் கிஸராவிற்கு அனுப்பி வைத்தபோது அக்கடிதத்தைச் சுருட்டிக் கிழித்து எறிந்தார். இதை கேள்விப்பட்ட நபியவர்கள் ‘அவரையும் அவரது ஆட்சியையும் அல்லாஹ் தகர்ப்பானாக’ எனப் பிரார்த்தித்தார்கள்.(புகாரி:64) பின்னர் நபியவர்களோடு பஹ்ரைன் சமாதானம் செய்து கொண்டு ஜிஸ்யா வரி செலுத்தி இஸ்லாத்தை எதிர்க்காமல் இருக்கும் உடன்படிக்கையைக் கடைபிடித்தது. இக்காலப் பகுதியிலேயே அப்துல் கைஸ் கோத்திரத்தினர் இஸ்லாத்தை ஏற்கின்றனர். இங்கெல்லாம் இடம்பெரும் பஹ்ரைன் இன்றைய பஹ்ரைனை விட ஸஊதியின் இன்றைய கிழக்குமாகாணப் பகுதிகளையே மிகையாக ஆழ்வதைக் காணமுடிகிறது.
இன்றைய ஓமானும் அன்றைய விரிந்த பஹ்ரைனின் ஒரு பகுதிதான். ‘ஓமானுக்கு நீங்கள் பிரச்சாரம் செய்யச் சென்றிருந்தால் அவர்கள் உம்மை ஏசியிருக்கவும் மாட்டார்கள். உம்மை அடித்திருக்கவும் மாட்டார்கள்’ என்று நபியவர்கள் காயப்பட்ட ஒரு நபித்தோழருக்கு சிலாகித்திச் சொன்னார்கள்.(முஸ்லிம்:2544) இதற்கு விளக்க நூல் எழுதிய இமாம் நவவி அவர்கள் ‘ஓமான் பஹ்ரைனின் பிரதேசங்களில் ஒன்று’ என்று எழுதுகிறார். இவர் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த இப்னு பதூதா மற்றும் சில அரபு நாடுகாண் பயணிகளின் நூல்களிலேயே முதன் முதலாக இன்றைய பஹ்ரைனிற்கு மாத்திரம் பஹ்ரைன் என்ற பெயரை உபயோகித்ததைக் காண முடிகிறது.
இஸ்லாத்திற்குப் பின் பஹ்ரைன்
பஹ்ரைன் ஒரு செல்வந்தப் பிரதேசமாகவே அன்று முதல் இன்றுவரை அறியப்படுகிறது. தொழில் வாய்ப்பற்வர்கள் அந்நாட்டில் 4 சதவீதத்திற்கும் குறைவானவர்களாகவே உள்ளனர். நபியவர்களும் தன் தோழர்களிடத்தில் பஹ்ரைனின் வரிப்பணம் வந்தால் இவ்வாறு இவ்வாறெல்லாம் உங்களுக்குத் தருவேன் என்று சொன்ன பல செய்திகளைக் காண முடிகின்றன. பஹ்ரைன் கொஞ்சம் கொஞ்சமாக அமைதியான முறையில் இஸ்லாத்தைத் தழுவ ஆரம்பித்து பின் முழுமையடைந்தது. அபூக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சியில் நடந்த ஸகாத் மறுப்பு எனும் ரித்தத் இங்கேயும் பரவாலக ஏற்பட்டது. பின்னர் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நிலமையை யுத்தத்தால் சீர் நிலைக்குக் கொண்டு வந்தார்கள் என்ற செய்தி நாம் அறிந்ததே. உமையாக்களின் இஸ்லாமிய ஆட்சிக்காலப் பகுதியில் இங்கே மஸ்ஜிதுல் கமீஸ் எனும் பள்ளிவாயல் எழுப்பப்ட்டது. இன்றைய பஹ்ரைனில் இன்றும் அழகுற அந்தப் பள்ளி காட்சி தந்து கொண்டிருக்கிறது. 8ம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் அப்பாஸஸயர்களின் இஸ்லாமிய ஆட்சி அந்கே உருவாகிறது. பின்னர் 899 இல் இருந்து 11ம் நூற்றாண்டின் 58கள் வரை கராமிதா எனும் சீயாப் பிரிவினரின் ஆட்சி அங்கே நடந்தது. காராமிதர்களின் ஆட்சியை எதிர்த்து விடுதலை பெற்று மறுபடியும் அப்பாஸிய இஸ்லாமிய ஆட்சியாளரான காஇம் பில்லாஹ் வுடன் முதலில் இணைந்து கொண்ட நாடு இன்றைய பஹ்ரைன். பின்னர் 1330களில் ஹுர்முஸ்களின் ஆட்சிக்கு பஹ்ரைன் வரிசெலுத்தி வந்தது. இக்காலப் பகுதியிலிருந்துதான் வரலாற்று நூல்களில் இன்றைய பஹ்ரைனின் தலை நகரான மனாமா அறியப்படுகிறது. அதே போன்று இந்த நூற்றாண்டில் எழுதப்பட்ட இப்னு பதூதா பின்னர் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த இப்னுல் முஜாவிர் போன்றவர்களின் குறிப்புக்களில்தான் பஹ்ரைன் என்ற பதப் பிரயோகம் இன்றைய பஹ்ரைனை மாத்திரம் குறிக்கும் வகையில் காணக்கிடைக்கிறது. எனினும் இதனை வரையறுத்துச் சொல்ல முடியாது. 1521 இல் போர்த்துக்கேயர்கள் பஹ்ரைனை ஆக்கிரமித்தார்கள். 1602 இல் இன்றைய பஹ்ரைனை பாரசீக் சீயா சபவிப் பிரிவனர் ஆக்கிரமிக்கும் வரையில் 80 வருடங்கள் போர்த்துக்கேயர்களே ஆட்சி செய்தனர். இடையில் ஓமானியர்களில் சில ஆண்டு ஸ்தீரனமற்ற ஆட்சி வருடங்களைத்தவிர. பின்னர் 1753ம் ஆண்டு நஸ்ர் அல் மத்கூரின் ஆட்சி நடந்தது. இவரின் ஆட்சி 1783வரைத் தொடர்ந்தது.
பஹ்ரைனில் ஆலு கலீபாக்களின் ஆட்சி
1783 இல் அத்னானிய மூல வம்சத்தின் உப கோத்திரமான தஃலபின், உப கோத்திரமான ஜுமைலாவின் வழி வந்த நஜ்திலிருந்து வெளிக் கிழம்பி கத்தரில் ஸபாராவில் வாழ்ந்த ஆலு கலீபா கோத்திரத்தினர் ஆட்சியைக் கைப்பற்றினர். அன்று தொடங்கி 1999 இல் ஆட்சி ஏற்ற ஹம்த் இப்னு ஈஸா ஆலு கலீபா வரை அவர்களே பரம்பரையாக ஆண்டு வருகின்றனர். இந்த 2 அரை நூற்றாண்டுகளிலும் பல விதப் படையெடுப்புக்கள் மேற்கத்தேய தலையீடுகள் என பல நிகழ்வுகள் உண்டு. இந்த சுருக்கமான தொகுப்பு அதற்கு இடந்தராது. 1975 இலேயே பாராளமன்ற நடைமுறையை அன்றைய மன்னராக இருந்த ஈஸா இப்னு ஸல்மான் கொண்டு வந்தார். அரேபிய வளைகடாவில் முதலில் பெற்றோல் கண்டுபிடிக்கப்பட்ட இடமும் பஹ்ரைன்தான்.
தவ்வாறுல் லுஃலுஆ வில் ஆரம்பித்த புரட்சி ….
வளைகுடா கூட்டுறவு சபையின் ஞாபகார்த்த சதுக்கமான தவ்வாறுல் லுஃலுஆவையே ஆர்ப்பட்ட மையமாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தேர்ந்தெடுத்தனர். இது தலைநாகரான மனாமாவில் உள்ளது. இங்கிருந்தே போராட்டம் ஆரம்பித்தது. இப்போராட்டத்தில் சீயாக்கள் அதிகமாகக் காணப்பட்டாலும் ஸுன்னாப் பிரிவினரும் சமமாகவே காணப்பட்டார்கள். நாட்டில் அவர்கள் கருதிய சில மாற்றங்களை வேண்டவே அங்கே அதிகமானவர்கள் கூடியிருந்தனர். இவர்களில் அதிகமானவர்களுக்கு ஆட்சி மாற்றம் பற்றி கோரிக்கைள் இருக்கவில்லை என்பதே உண்மை. திறந்த வாசிப்பின் மூலம் இந்த முடிவையே நாம் பெற முடியும். அங்கே கூடிய சீயா மக்களில் அதிகமானவர்கள் ஈரானினதே அல்லது வேறெந்த நாட்டினதோ தலையீட்டை விரும்பவில்லை என்பதும் இன்னொரு உண்மை. சீயாக்கள் ஈரானின் வருகைக்காகத்தான் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. நாட்டின் ஸுன்னாப் பிரிவினரைப் போன்று அதிகமாக இருக்கும் சீயாக்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் அது ஈரானின் வருகைக்காகத்தான் என்று ஒட்டு மொத்த ஆர்ப்பாட்டத்தையும் குறை சொல்வது சரியான பார்வையாகத் தெரியவில்லை. தேசிய ஜனநாயக ‘வஃத்’ எனும் சீயா சார்பு அமைப்புக் கூட நாம் ஈரான் உற்பட எந்த அந்நியத் தலையீட்டையும் விரும்பவில்லை எனத் தெளிவாகவே அறிக்கைவிட்டது.
ஆனால்…
இந்த ஆர்ப்பாட்டத்தை ஈரானி அரசியல் மற்றும் சீயாப் புரட்சியாக மாற்றி அரபுலகில் மூக்கை நுழைக்கும் ஈரானிய அபிலாசைகளுக்குச் சார்பாக திசை திருப்ப வேண்டும் என்ற திட்டம் ஏற்கனவே ஈரானிய அரசின் கண்காணிப்பில் இயங்கும் சில குறுகிய மனப்பான்மை கொண்ட சீயா அமைப்புக்களாலும்  இடது சாரிக் கட்சிகளாலும் தீட்ப்பட்டிருந்தது என்பது பல வகையில் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதைப் பல சீயா ஆர்ப்பாட்டக் காரர்கள் ஏற்காமல் இருக்கலாம். நிராகரிக்கலாம். ஆனால் அவர்களுக்கே தெரியமால் அவர்கள் நகர்த்தப்படுகிறார்கள் என்பதே மிகப்பெரும் உண்மை.
ஸல்மானிய வைத்தியசாலையில் நடந்தது என்ன?
பஹ்ரைனின் வசதிகள் கூடிய மிகப்பெரிய வைத்தியசாலையே ஸல்மானியா. இங்கே கொண்டுவரப்படும் பஹ்ரைன் பொலிஸாரால் காயப்பட்டவர்களின் வீடியோ காட்சிகளை ஈரானின் ஆலம் செய்திஸ்தாபனமும் ப்ரஸ் டீவியும் உடனுக்குடன் காட்டி பஹ்ரைன் அரசு தரப்புக்கெதிரான சர்வதேச கருத்தை விதைப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தது. அதே போன்று பஹ்ரைன் பொலிஸாரால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கெதிராக நடந்த தாக்குதல்களை யூடியூபில் உடனுக்குடன் பரவாலாகக் காணமுடிந்தது. இவ்வளவு வேகமாக எவ்வாறு இவைகள் திட்டமிட்டபடி மீடியா மயப்படுத்தப்பட்டன என்பது பஹ்ரைன் அரசுக்கே பெரும் கேள்வியாக இருந்து வந்தது. ஸல்மானிய வைத்தியசாலையின் நிலையையும் வளைகுடாக் கூட்டுறவுப் படைகளின் வருகையையும் காரணங்காட்டி சுகாதார அமைச்சர் பதவியை ராஜினாமாச் செய்தார். பெப்ரவரி 14 தொடக்கம் மார்ச் 16 வரைக்கும் ஸல்மானிய வைத்தியசாலையின் நிலை பயங்கரமாக இருந்தது. வைத்திய வசதிக்குப் பெயர்போன இந்த இடம் ஆர்ப்பாட்டத்திற்கு முன்னரே அதை திசை திருப்ப இருந்த குறுகிய மனங்கொண்ட சில சீயா அமைப்புக்களால் மறைமுகமாகக் கைப்பற்றப்பட்டிருந்தது. சீயா வைத்தியர்களும் தாதிகளும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளனர். உடன்படாதவர்கள் உயிருக்குப் பயந்து அல்லது வைத்திய சேவை சீர்குழையக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் மௌனமாக இருந்துள்ளனர் நிலமை மோசமாக மோசமாக தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் அதிகமானவர்கள் வைத்தியர்கள் தாதிகள் சிறப்பு வைத்தியப் பகுதியைச் சேர்ந்தவர்கள் காவலர்கள் என அனைவரும் இதற்குத் துணை நின்றுள்ளனர். அதே போன்று இரத்த வங்கியையும் தங்களுக்கு சார்பாக இயங்க வைத்துள்ளனர். அதிகமான சீயாப் பிரிவினர் இவைகளில் வேலை செய்தது இத்திட்டத்தை இளகுவில் சாதிக்க இளகுவாகிப் போனது. ஆலம் செய்திஸ்தாபனத்திற்கு நேரடி செய்திகளை வீடியோக்களாக வழங்க புகைப்படக் கருவியும் வைத்தியசாலையில் புகுத்தப்பட்டிருந்தது. வைத்தியசாலைக்குள் ஹுஸைன் முசைமிஃ மற்றும் ஹபீப் மிக்தாத் போன்ற புரட்சியைத் தூண்டி வழநடத்தியவர்களைத் தவிர வேறு யாரும் அதற்குள் அனுமதிக்கப்ட்டிருக்கவில்லை. இந்த நிகழ்வு நடந்தது அதன் பின் இவைகள் கண்டுபிடிக்கப்பட்டடு ஸல்மானிய வைத்தியசாலை சீர் நிலைக்கு கொண்டுவரப்பட்ட போதுதான் சுகாதார அமைச்சர் ராஜினாமா செய்தார். இதைப் பத்திரிகைகள் வேறு வடிவில் சித்தரித்தன.
அமைதியாகப் போராட்டம் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு பொலிஸாரிற்கு எதிரான வன்முறைகள் அதிகரிகத்த போது குறைந்தது. பொலிஸாரும் அதன் பின் ஆயுதங்களைப் பயன்படுத்தினார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இளவரசரின் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைக்கான அழைப்பின் பின்னரும் மக்கள் ஆட்சிவீழ வேண்டும் என்று தொடர்ந்த சொல்ல ஆரம்பித்ததும் சீயாத் தலைவர்களின் கொடிகளையும் சீயா நம்பிக்கை சார்ந்த பதாதைகளை மக்கள் உயர்த்த ஆரம்பித்ததும் ஆர்ப்பாட்டத்தில் கலந்திருந்த சுன்னாப்பிரிவினர் கலைய ஆரம்பித்தார்கள் மட்டுமல்ல நாட்டின் பல இடங்களில் ஆட்சிக்கு சார்பான சீயாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வெடிக்க ஆரம்பித்துள்ளன.
ஈரானின் பஹ்ரைன் அரசாங்கத்திற்கு எதிரான சர்வதேச கருத்துப் பரவலாக்கம் தோல்வியுற ஆரம்பித்ததும் உளற ஆரம்பித்துவிட்டனர். ஸஊதி பஹ்ரைனில் தலையிட்டுள்ளது அனுமதிக்க முடியாதது. அதன் நஷ்டங்களை ஸஊதி சுமக்க வேண்டி வரும் என லுப்னானில் ஹிஸ்புல்லாவின் தலையீட்டை மறந்து அலி காமினீ விமரிசித்துள்ளார். இதே கருத்தையே தன் நாட்டில் தனக்கெதிராக நடக்கும் ஆர்ப்பாட்டத்தை மறந்து அஹ்மதி நஜாதி வெளிப்படுத்தியுள்ளார். ஈரானின் வெளி நாட்டமைச்சர் அலி அக்பர் ஸாலிஹ் ‘ஒரு நாளும் ஈரான் ஸஊதியின் தலையீட்டிலே கைகட்டி மௌனமாக இருக்கப் போவதில்லை’ எனக் கொக்கரித்துள்ளார். ஏன் இவர்கள் இவ்வளவு பதறுகிறார்கள் என்பது மர்மமாகவே உள்ளது. வளைகுடா கூட்டுறவு நாடுகளில் ஒன்று தன் நாட்டின் பாதுகாப்பிற்காக பிற அங்குத்துவ நாடுகளின் உதவியை நாடியுள்ளது அவ்வளவுதான். அப்படியிருக்க ஏன் இந்த கொக்கரிப்பு. இவைகள் அனைத்தும் ஸஊதியின் உதவிப்படையின் வருகையின் பின்னணியையும் தேவையையும் எமக்கும் மறைமுகமாக உணர்த்துகிறது.
லன்டனிலிருந்து வெளியாகும் ‘ஷர்குல் அவ்ஸத்’ சஞ்சிகைக்கு ஸஊதிய உதவிப்படை தலைவர் உஸைமிஃ அளித்த பேட்டியிலே ‘நாம் ஆர்ப்பட்டத்திற்கு எதிராகவோ உற்பிரச்சினைகளுக்காகவோ வரவில்லை. கூட்டுறவு நாடுகளின் அங்கமான பஹ்ரைனில் வெளிநாட்டு தலையீட்டுக்கெதிராகவே வந்துள்ளோம். நேடோ கூட்டுறவுப் படைகளுக்கு அடுத்த நிலையின் பலமான நவீன ரக ஆயதங்களையும் சீரிய இராணுவ வழிகாட்டல்களையும் கொண்டிருக்கிறோம். அல்லாஹ்வின் உதவியால் தேவையற்ற அனுமதியற்ற எந்தத் தலையீட்டையும் நாம் அனுமதிக்கப்போவதில்லை’ என்று சொல்லியிருப்பது ஈரான் புரட்சியை திசை திருப்பி அரபுலகில் நுழைய ஏற்கனவே திட்டம் தீட்டியிருந்தது என்பதையும் இதற்கு ஆயத்தமாகவே அரபுலகம் இருந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது.இன்றைய பஹ்ரைனின் புரட்சி அவர்களுக்குத் தெரியமாலேயே தவறான திசையில் வழி நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை எமக்குத் தெளிவாகத் தெரிவிக்கின்றன.
ஆனாலும் தொடர்ந்து வரும் நிகழ்வுகள் ஈரான் மத்திய கிழக்கு யுத்தத்திற்கு வழிவகுக்குமா? அப்படி வழிவகுத்தால் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சாதகங்களுக்காக இதை எப்படி எதிர்கொள்வார்கள்? ..?  ..?எனப் பல கேள்விகளுக்கான பதில்களை சுமந்த நிலையில் எதிர்காலம் எம்மை சந்திக்க இருக்கிறது. யா அல்லாஹ் நீயே துணை.
(எழுத்துப் பிழைகள் இருந்தால் நாளை திருத்தப்படும் இன்சா அல்லாஹ்)

மீடியாக்களின் திரித்தல் தணிக்கைகளுக்கு அப்பால் லிபியா நிலவரம் ஓர் அலசல்

March 24, 2011
முஸ்லிம் கண்டமான ஆபிரிக்காவின் வட நாடுகளில் தூனிஸ் முதலாக அல்ஜீரியா மொரோக்கோ என ஆட்சியாளர்களுக்கு எதிரான புரட்சிகள் வெடித்ததைத் தொடர்ந்து எகிப்து பஹ்ரைன் யமன் ஈரான் போன்ற நாடுகளிலும் மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக களமிரங்கியதை கண்டுகொண்டிருக்கும் இவ்வேளையில் வட ஆபிரிக்க நாடுகிளில் ஒன்றான லிபியாவைப் பற்றியும் அதன் அரசியல் வரலாற்று நிலவரங்கள் பற்றியும் தெரிந்து கொள்வோம்.
லிபியா என்ற பிரதேசம் இஸ்லாமிய வரலாற்றில் தராப்லிஸ் என்று வழங்கப்பட்டு வந்தது. இன்று தராப்லிஸ்(ட்ரிபொலி) என்பது அதன் தலை நகரிற்கு வழங்கப்படுகிறது. லிபியா என்ற பெயர் ஓர் ஆதிப் பெயராகும். லீபூ என்ற சொல்லிலிருந்து பிறந்தது. லிபியர்கள் என்ற பழமை இனத்தையும் மொழியையும் இது குறிக்கிறது. ஆரம்பத்தில் கிபியிற்கு முன்னர் ஆபிரிக்கா என்பதற்குப் பதிலாக லிபியா என்றே ஆபிரிக்கக் கண்டம் முழுவதும் அழைக்கப்பட்டது. குறிப்பாக வட ஆபிரிக்க நாட்டுப் பகுதிகளைக் குறிக்க இந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டது. ஆபிரிக்கா என்ற பெயர் தூனிஸின் மஹ்தியா என்ற நகரத்திற்கே ஆரம்பத்தில் வழங்கப்பட்டது. ஆக்கிரமப்பாளர்கள் அனைவரும் ஒன்றோ எத்தியோப்பா(எரிந்த முகம்) அல்லது லிபியா என்ற பெயர்களையே ஆபிரிக்கக் கண்டத்திற்கு வழங்கி வந்தனர். அதே நேரம் அரேபியர்களிடத்தில் கண்டம் முழுவதையும் குறிக்க எந்தச் சொல் ஆளப்பட்டது என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் இல்லாத போதினும் அவர்கள் பிரதேசவாரியாகவே ஆபிரிக்க நாடுகளுக்குப் பெயர் சூட்டியுள்ளனர் என்பது தெளிவு. லிபியா என்ற பெயர் சுருங்கி இன்று தூனிஸிற்கும் எகிப்திற்கும் தசாத் நைஜீரியாவிற்கும் மத்தியிலுள்ள பிரதேசத்திற்கு வழங்கப்படுகிறது.
உமர் ரழியல்லாஹு அன்ஹுவுடைய ஆட்சிக்களாலத்தில் அம்ர் இப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹுடைய தலைமையில் தராப்லிஸ் (லிபியா) வெற்றிகொள்ளப்பட்டது.ஆபிரிக்காவில் இஸ்லாம் பரவியதில் லிபியர்களின் பங்களிப்பு அதிகமானது. இவ்வாறு பலவிதமான ஆட்சிமாற்றங்களையும் ஆக்கரமிப்புக்களையும் கண்ட லிபியா கடைசியா இத்தாலியின் ஆக்கிரமிப்புக்குள்ளானது.ஸனூஸியப் பாசறையில் வளர்ந்த உமர் முக்தார் என்ற முதிய வயதின் இளந்துடிப்புப் போராட்டமும் உயிர்த்தியாகமும் இவர்களுக்கெதிராகவே நடைபெற்றது. பலவிதமான போராட்டங்கள் ஐரோப்பாவின் சதிவலைகளின் முறியடிப்புகளுக்குப் பின் 1950களில் லிபியா பெயரளவில் சுதந்திரமடைந்தது.
இக்காலப் பகுதியில் மன்னராக இருந்தவர் முஹம்மத் இத்ரீஸ் அஸ்ஸனூஸி இவர் அல்ஜீரியா மூலத்தைச் சேர்ந்தவர்.முஹம்மத் இப்னு அலி அஸ்ஸனூஸி என்ற முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாபின் பிரச்சாரத்தினால் கவரப்பட்ட ஒரு பிரபல்ய மார்க்க அறிஞர்.இவர் தன் இறுதிக்காலப் பகுதியை லிபியாவிலேயே கழித்தார். ஸனூஸயா என்ற இயக்கத்தின் ஸ்தாபகர். இவர் அகீதாவில் தௌஹீதிலே தெளிவுடையவராக இருந்தார். ஆனால் போக்கிலே ஸுபித்துவத்தை வழியாகக் கண்டவர். ஆக்கிரமிப்பாளர்களுக்கெதிரான நடவடிக்கைகளில் கடுமையாக ஈடுபட்டார். வட ஆபிரிக்காவில் ஸனூஸிய அமைப்பின் தாக்கம் குறிப்பிடத்தக்கது. இவரது மூன்றாவது தலை முறையில் உருவான போரர்தான் இத்ரீஸ் அஸ்ஸனூஸி. 1969ம் ஆண்டு இவர் நாட்டுக்கு வெளியே சிகிச்சைக்காகச் சென்றிருந்த சமயமே முஅம்மர் அல்கதாபி புரட்சியின் மூலம் இளகுவாக ஆட்சியை கைப்பற்றிக் கொண்டார்.
இத்ரீஸின் ஆட்சியில் நாட்டில் பல துறைகளில் ஸ்தீரனமின்மை காணப்பட்டாலும் இத்ரீஸ் மார்க்க நிலைப்பாடுகளுக்கு மிக நெருங்கியவராக இருந்தார். வட்டி முறையற்ற பொருளாதாரத்தைக் சட்டமாக்கினார். ஆனாலும் அமைச்சரவை அதை குறிப்பிட்ட துறைகளில் மாத்திரமே நடை முறைப்படுத்தியது. லிபிய ஆட்சியை ஸஊதி போன்று மம்லகதுஸ் ஸனூஸியா என்று பெயர் சூட்டுமாறு ஆலோசனை முன்வைக்கப்பட்டும் அதனை மறுத்து விட்டார்.(ஆனால் இந்த ஆலோசனையை முன்வைத்தவர்தான் முஆம்மர் கதாபியின் புரட்சியின் வெற்றியை வரவேற்றவர்களில் முதன்மையானவராக இருந்தார் என்பது தனிவிடயம்) நாட்டு மக்களால் தன் மீது உள்ள சில அதிருப்திகளை உணர்ந்த அவர் மக்களுக்கு அழகான கடிதம் ஒன்றை எழுதினார். இவருக்கெதிராக கொடி தூக்கியவர்கள் எழுப்பிய கோசம்தான் ‘இத்ரீஸல்ல இப்லீஸ்’ ‘இத்ரீஸல்ல இப்லீஸ்’ என்ற வாசகம் அந்த ஒவ்வொரு கனத்திலும் அந்த மன்னர் சொன்ன வார்த்தை ‘யாஅல்லாஹ் அவர்களின் பிரார்த்தனையை அங்கீகரிப்பாயாக’ நாட்டில் நிலவிய ஆன்மீக அமைதியைக் கவனிக்காமல் வெறும் பொருளாதார ரீதியான பார்வையால் ஒரு நல்லவரை இழந்தார்கள். அல்லாஹ் அந்த மன்னரின் பிரார்த்தனையை அங்கீகரித்தது போல் ஒரு இப்லீஸ் ஆட்சிபீடம் ஏறினான்.
ஆட்சி பீடம் ஏறிய கதாபி மூலம் ஒரு நல்ல விடிவை மக்கள் எதிர்பார்த்தார்கள். கடாபி மேற்கத்தேயத்தை எதிர்த்தார். அரபுலகில் அந்நியத் தலையீட்டை கடுமையாக எதிர்த்தார். வீரமான உரைகள் நிகழ்த்தினார். பொருளாதார முறைமையில் பல வித மாற்றங்களை நாட்டில் கொண்டு வந்தார். சம்பளம் வாங்கினால் அவன் அடிமை எனவே தொழிலாளர்களல்ல பங்குதாரர்கள் என சம்பள முறைமையை பங்கு முறைமையாக்க திட்டங்களைக் கொண்டு வந்தார். இது போன்று இன்னும் பல மாற்றங்களைக் கொண்டு வந்தார். தனது அரசியில் செல்வாக்கையும் எகிப்திய அதிபர் ஜமால் அப்துந் நாஸருடைய தொடர்பையும் பயன்படுத்திப பல நூல்களை தனக்குச் சார்பாக எழுத வைத்தார். அதில் பிரபல்யமான நூலில் ஒன்றுதான் ‘காலித் இப்னு வலீத் தொடக்கம் கதாபி வரைக்கும்’. ஆனால் கடாபி நாட்டில் கொண்டு வந்த மாற்றங்கள் மற்றும் மேற்கு எதிர்ப்பு நிலைப்பாடுகள் அனைத்தும் அவரது இஸ்லாமிய மார்க்கப் பற்றின் விளைவாகவோ நாட்டு மக்கள் மீது கொண்ட ஈர்ப்பின் விளைவாகவோ உருவானதல்ல மாறாக தனது சோஸலிஸ சித்தாந்தத்தின் நகலே அவைகள் என்பதை உலகம் உணர நீண்ட காலம் எடுக்கவில்லை.
ஆனால் இவர் தனது குருட்டுச் சீர் திருத்தங்களை இத்தோடு நிறுத்தவில்லை. மார்க்க மார்க்க அம்சங்களில் தன் விருப்பப்படி விளையாட ஆரம்பித்தார். எதிர்த்தவர்களை சிறைப்பிடித்தார். சித்திரவதை செய்தார். பள்ளிவாயல்களை குண்டு வைத்துத் தகர்த்தார்.
குர்ஆனிலிருந்து குல் என்ற வார்த்தைகளை அகற்ற வேண்டும் என்றார். அது நபியவர்களுக்கு மட்டும் உரியது. இப்பொழுது தேவையில்லை. சொன்னது மாத்திரமல்லாமல் அஸர் தொழுகையின் போது மூன்று ரக்அத்களாக அஸரைத் தொழுலித்து அதில் குல்ஹுவல்லாஹு அஹத் அத்தியாயத்தை குல் என்ற சொல்லை விட்டு ஓதினார். அந்த நேரமே இந்தக் கருத்தையும் பகிரங்கமாகத் தெரிவித்தார்.
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என நபிகளார் பெயரைக் கேட்டவுடன் கூறுதல் இன்னும் எம்மில் மாறாமல் இருக்கம் ஜாஹிலிய இணைவைப்பு என விமரிசித்தார்.
பசுமை நூல் என்ற பெயரில் நூலொன்றை எழுதி அதுவே தனது ஆட்சிமுறை என பகிரங்கமாகத் தெரிவித்தார். இது தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
டென்மார்க் நபியவர்களுக்கு கேலிச்சித்திரம் வரைந்ததைத் தடை செய்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களைப் பொலிஸாரை ஏவி பலரைச் சுட்டுக் கொண்டார். அந்த நாளியே இந்தப் புரட்சியும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பல அடக்குமுறைகள் அநியாயங்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்துள்ளனர். முஹம்த் இத்ரீஸ் அஸ்ஸனூஸிக் கெதிரான புரட்சியில் களந்து கொண்ட மக்கள் இதிலும் களந்து கொள்வது ஆச்சரியமல்ல. ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பது மார்க்க அடையாளங்களின்றிய ஒரு திறந்த சுதந்திரமான ஆட்சியைத்தான் என்பதை அவர்களது நடவடிக்கைகள் தெளிவாகவே காட்டுகின்றன.
எது எவ்வாறிருந்தாலும் மேற்குலகின் தலையீட்டை இதில் அங்கீகரிக்க முடியாது. பொதுமக்களுக்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்துகிறார் என்பதே முதன்மைக் காரணியாக முன்வைக்கப்படுகிறது. மீடியாக்கள் வழியாக இக்கருத்தை மக்கள் மயப்படுத்தவிட்டார்கள். தூனிஸிய எகிப்தியப் புரட்சியோடு இதை ஒப்பிட முடியாது. அங்கே நிராயுதபாணியான மக்களின் புரட்சியே நிகழ்ந்தது. எந்த உடமைக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை. ஆனால் இங்கே போராடுபவர்கள் முதல் நாளே ஆயுதங்களுடன் புரட்சியில் இறங்கிவிட்டனர். நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதம் தாங்கும் போது ஒரு நாடு இராணுவ பலத்தைப் பிரயோகிப்பது இயல்பானதே. இதைக் காரணங் காட்டி இவ்வளவு அவசரமாக லிபியாவை 3 வீட்டோ நாடுகள் தாக்க முற்பட்டிருப்பதும் அதற்கு பொதுமக்கள் இறக்கிறார்கள் எனக் காரணங்காட்டுவதும் ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதையே.
சதாம் ஹுசைன், கடாபி ஆகியோர் தனது சொந்த மக்களை கொன்று குவித்தார்கள். மக்கள் படுகொலை, ஏகாதிபத்திய தலையீட்டுக்கு காரணமாக காட்டப்படுகின்றது. இது பல நூற்றாண்டுகளாக, காலனியாதிக்க காலத்தில் இருந்தே கற்பிக்கப்படும் நியாயம். ‘இந்தியாவில் வாழும் இந்துக்கள் பெண்களை உயிரோடு எரிக்கும் காட்டுமிராண்டிகள்.”இந்தியப் பெண்களை காப்பாற்றும் நல்லெண்ணத்துடன்’ தான் பிரித்தானியா இந்தியாவை தனது காலனியாக்கியது. ஐரோப்பாவில் இதனை ‘வெள்ளை மனிதனின் கடமை’ என்று கூறிக் கொள்வார்கள். அதாவது ‘காட்டுமிராண்டிகளான இந்தியர்கள்இ அரேபியர்இ ஆப்பிரிக்கர்களுக்கு நாகரீகம் கற்றுக் கொடுப்பது’ ஐரோப்பியரின் கடமை ஆகுமாம். காலனிய சுரண்டலை நியாயப் படுத்தும் நியாயப் படுத்தும் கதையாடல்கள்இ இன்று லிபியா வரை தொடர்கின்றது. இன்று மேற்குலக மக்களை மட்டுமல்ல, அனைத்து உலக மக்களையும் தங்கள் பக்கம் ஈர்ப்பதற்கு வசதியாக தொலைத் தொடர்பு ஊடகங்கள் வந்து விட்டன. சி.என்.என்.பி.பி.சி., அல்ஜசீரா எல்லாமே ஏகாதிபத்திய தலையீட்டுக்கு வழி சமைத்துக் கொடுக்கின்றன.
பெங்காசியா நகரம் ஆர்ப்பட்டக்காரர்களின் கரமிருந்து கடாபியின் கையில் வருவதற்கு முன்னர் நேடோ களமிருங்கியதற்கான காரணம். பெங்காசியா பொருளாதாரத் தலைநகர். எண்ணைவளம் அங்கேதான்.அங்கேதான் ஆடு நனைகிறது என எமெரிக்கா அழுகிறது. எல்லாம் நாடகம். கடாபி ஒழிய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் ஆர்ப்பட்டம் எந்த இலக்கை நோக்கி நகர்கிறது என்பதே இப்பொழுதுள்ள முக்கிய கேள்வி.

இஸ்லாமிய உலகின் அறிவியல் பொக்கிசங்கள் எவ்வாறு மேற்குலகிற்குக் கடத்தப்பட்டன?

August 19, 2010
மஸ்ஊத் அப்துர்ரஊப்
அறிமுகம்
பேர்லின் நகரின் மேற்கில் அமைந்துள்ள ஜேர்மன் தேசிய நூலகத்தில் கிட்டத்தட்ட 9000 அரபுக்கையெழுத்துப்பிரதிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 2500 பாரசீகக் கையெழுத்துப்பிரதிகளும் 3500 துருக்கிய கையெழுத்துப்பிரதிளும் 60 உருதுக் கையெழுத்துப் பிரதிகளும் அடங்குகின்றன. இஸ்லாமிய நாகரிகத்தின் அறிவியல் எச்சங்களாகவுள்ள இப்பிரதிகளை வரலாற்று ரீதியாகவும் இஸ்லாமிய உம்மத்தில் மீண்டும் அறிவியல் மறுமலர்ச்சியைத் தருவிபப்தில் இவற்றின் வகிபங்கு தெடர்பாகவும் பல்வேறு கோனங்களில் ஆய்வு செய்யப்பட வேண்டிது ஒரு புறமிருந்தாலும் இந்ந அறிவியல் சாதனங்கள் எப்படி அங்கே போனது? ஏன்ற கேள்விக்கு விடைகாண்பதே நாம் இங்கே கவனிக்க வேண்டியதாகும்.
காலத்தால் அழியாது நவீன முறையில் பாதுகாத்து அவற்றை ஒப்பீட்டாய்வு செய்து உறுதிப்படுத்தி அட்டவணைபப்படுத்திய பின் எவ்வாறு குறிப்பிடத்தக்க பிரதிகள்      மாத்திரம் புத்தகமாக வெளியிடப்படுகின்றன? குறிப்பாக இஸ்லாத்துக்கு முறணான கருத்துக்களைக் கொண்ட ஏடுகள் மாத்திரம் ஏன் பிரசுரமாகின்றன? போன்ற கேள்விகள் இவை தொடர்பான நியாயமான பல யூகங்களைத் தோற்றுவிக்கின்றன.
அறிவுப்பரம்பலை புவியியல் எல்லைகளால் கட்டுப்படுத்த முடியாது. கையெழுத்துப் பிரதிகளைப் பொறுத்த மட்டிலே அச்சு இயந்திரங்களில்லாத ஆரம்ப காலத்தில் மனித கைகளால் எழுதப்பட்டவைகளாகும். நவீன அச்சு இயந்திரங்களால் எவ்வளவுதான் புத்தகங்கள் அச்சிடப்பட்டாலும் கையால் எழுதப்பட்ட அதன் மூலப்பிரதிக்கு தனி மௌசு இருப்பதைப் போன்று பண்டைய நூற்றாண்டுகளில் பல அறிஞர்களால் எழுதப்பட்ட கையேடுகள் ஆய்வுகளுக்கு சிறந்ததும் வலிமையுமான மூலாதாரங்களாகக் கருதப்படுகின்றன. இதனாலேயே அவை மிகுந்த கவனத்துடன்  பாதுகாக்கப்படுகின்றன. உலக வரலாற்றில் பல அறிவியல் சாதனைகளுக்கு வித்திட்ட இஸ்லாமிய உம்மத்தானது இது போன்ற தொன்மையான பல ஆவனங்களைப் பாதுகாத்து வைத்துள்ளது. அல் இஹ்யா என்ற பதம் உயிர்ப்பித்தல் என்ற அர்த்தமுல்லதாகும்.  பழைய ஆவனங்களை தடயங்களை உயிர்ப்பித்தல் என்ற விரிந்த கருத்தைக் கொண்டுள்ள இச்சொல் அதிகமாக இஸ்லாமிய உம்மத்தின் வரலாற்றில் பாவிக்கப்படுவதற்கான காரணம் தனக்குக் சொந்தமான அதிகமதிகம் புராதன அவணங்களை இந்த உம்மத் வைத்திருப்பதேயாகும்.
முஸ்லிம் நாடுகளிலிருந்து கிடைக்கப் பெற்ற அன்பளிப்புக்கள் மூலமாகவும் முஸ்லிம் நாடுகளிலிருந்து விலைக்கு வாங்கியதன் மூலமாகவும் இக்கையேட்டுப்பிரதிகள் பேர்லின் நூலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டீருக்கின்றன. இதுவல்லாத வேறு வழிகளிலும் கையெழுத்துப்பிரதிகள் அங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இந்நூலகத்தை உருவாக்குவதற்காக புரூஸியா(ஜேர்மனி) மன்னன் (பர்தரீக் வில்லியம் 1620-1688) அரேபிய இஸ்லாமியக் கையெழுத்துப்பிரதிகளைப் பெற்றுக் கொள்வதற்காகப் பெருமளவில் முயற்சித்ததாகவும் சிறந்த கீழைத்தேய ஆய்வாளர்களான ரிச்சட் ஹென்றிஸ் ஆகிய இருவரையும் கையெழுத்துப்பிரதிகளைத் திரட்டுவதற்காகவென மன்னன் நியதித்ததாகவும் வரலாறு கூறுகின்றது.
புரூஸியாவுக்கும் (ஜேர்மனி)  உத்மானிய சாம்பிராஜ்ஜியத்துக்கும் நெருக்கமான உறவுகள் பேணப்பட்டமையினால் இரு உலகப்போர்களிரும் ஒரே கூட்டணியாக ஜேர்மனியும் துருக்கியும் இணைந்திருந்தன. இரு நாடுகளுக்கிடையிலான இத்தொடர்பும் இஸ்லாமியக் கையெழுத்துப்பிரதிகள் ஜேர்மனிக்குச் செல்லக் காரணமாகவிருந்துள்ளன.
கீழைத்தேய மேலைத்தேய இஸ்லாமிய நாடுகளுடன் ஐரோப்பா மேற்கொண்டு வந்த வனிக நடவடிக்கைகளாலும் பெறுமதிமிக்க இந்த ஆவனங்கள் ஐரோப்பாவுக்குக் கடத்தப்பட பெரும்பங்காற்றியிருக்கின்றன. ஏனெனில் குறிப்பாக ஐரோப்பிய வர்த்தகர்கள் முஸ்லிம் நாடுகளில் காணப்படும் அறிவியல் வளங்கங்களையும் பெறுமதி வாய்ந்த பொக்கிஸங்களையுமே முடீயுமான அளவில் வாங்கியுள்ளார்கள். பிரித்தானியர் தமது காலணித்துவ நடவடிக்கைகளுக்காக ஏற்படுத்திய கிழக்கிந்தியக்கம்பனியை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
ஐரோப்பிய உலகம் அதிகமான இஸ்லாமிய நாடுகளைத் தனது காலணித்துவத்திற்கு உற்படுத்துவதற்கான காரணமும் இஸ்லாமிய உலகின் அறிவியல் வளங்களை சுரண்டும் நோக்கம்தான். அதன் பலனை இன்று அவர்கள் நுகர்கின்றனர்.
பேர்லின் நூலகம்
மேற்குலகின் அறிவியல் எழுச்சிக்குப் பங்காற்றிய பிரதானமான நூலகங்களில் இதுவுமொன்றாகும். பல கீழைத்தேய ஆய்வாளர்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்த இந்நூலகம் உலக அளவில் ஜந்தாவது பெரும் நூலகமாகக் கருதப்படுகின்றது. டமஸ்கஸில் உள்ள லாஹிரிய்யா நூலம் துருக்கியிலுள்ள இஸ்தன்பூல் நூலகம் அமெரிக்காவிலுள்ள பிரிஸ்டன் பல்கலைக்கழக நூலகம் கெய்ரோ நூலகம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக இந்நூலகமே கணிக்கப்படுகின்றது. 200 மில்லியன் ஜேர்மன் மார்க் செலவில் நிர்மானிக்கப்பட்ட இந்நூலகத்திலே சுமாராக மூன்றரை மில்லியன் புத்தகங்கள் காணப்படுகின்றன. 3000 கையெழுத்துப்பிரதிகள் இங்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 9000 அரேபியக் கையேட்டுப்பிரதிகளாகும். மீதமுள்ளவை பாரசீகம்இதுருக்கி இந்தியா சீனா போன்ற  நாடுகளின் கையெழுத்துப்பிரதிகளாகும். இவைகளனைத்தும் முறைப்படி வகைப்படுத்தப்பட்டு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. ஏன்றாலும் இன்னும் அட்டவணைப்படுத்தப்படாத 14000 கையெழுத்துப்பிரதிகள் இந்நூலகத்திலிருக்கின்றன.
அரேபியக் கையேட்டுப்பிரதிகள்
பொதுவாக இங்கு காணப்படும் அரபுக் கையெழுத்துப்பிரதிகளனைத்தும் குர்ஆன் பிரதிகளாகவும் தப்ஸீர் கலை ஹதீஸ் கலை  தர்கக்கலை சூபித்துவம் கவிதை அரபு இலக்கண இலக்கியம் வரலாறு போன்ற துறைகளில் எழுதப்பட்டவைளாகும். இலக்கியத்துறைகளில் எழுதப்பட்ட கையெழுத்துப்பிரதிகளே அதிகமாகக் காணப்படுகின்றன. இதற்குக் காரணம் என்னவென்று பார்க்கும் போது சென்ற நூற்றாண்டுகளில் இவ்வாவனங்களைச் சேகரித்தோருக்கு  இலக்கியம் சார்ந்த படைப்புக்களே இலகுவாகக் கிடைத்திருக்கின்றன. அல்லது வேறு துறை சார் ஆவனங்கள் அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்று விளங்கலாம்.
பேர்லின் நூலகத்துக்கு எக்காலப்பகுதியில் இந்த ஆவனங்கள் வந்து சேர்ந்தன?
கி.பி 19ம் நூற்றாண்டளவிலேயே இப்பிரதிகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. புரூஸியாவுக்கும் (ஜேர்மனி) உத்மானியப் பேரரசுக்குமிடையில் நிலவிய நெருக்கமான உறவுதான் அரேபிய துருக்கிய பாரசீக கையெழுத்துப்பிரதிகள் இந்நூலகத்துக்கு வருவதற்குப்பிரதான காரணமாகும். ஏனெனில் புரூஸிய(ஜேர்மனி)  நாட்டு மன்னன் கன்ஸல் அல் புரூஸி என்பவரை இப்பிரதிகளைச் சேகரிப்பதற்காகவென டமஸ்கஸில் நியமித்திருந்தான். இவருடைய முயற்சியினால் கிடைக்கப்பெற்ற 60 கையெழுத்துப்பிரதிகள் இந்நூலகத்திலுள்ளன. இவ்வாறு நபர்களை நியமிப்பது முக்கிய ராஜதந்திர நடவடிக்கையாகவுள்ளது. இதை மையமாக வைத்து பல நாடுகாண் பயணங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை வரலாற்றில் காணமுடிகின்றது. இதனடியாகத்தான் எட்வர்ட் என்ற நாடுகாண் பயணி எமனுக்கு ஒரு குழுவை அனுப்பி அங்கிருந்த 250 கையெழுத்துப்பிரதிகளை விலைக்கு வாங்கி ஜேர்மன் மன்னனிடம் கொடுத்ததாகவும் அவை பேர்லின் நூலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகின்றது. அதேபோன்றுதான் கிழக்கிந்தியக் கம்பனியில் பணியாற்றிய ஸப்ரன்ஜர் எனும் நாடுகாண் பயணி 2000 அளவுக்கும் கூடுதலான கையெழுத்துப்பிரதிகளைத்திரட்டினார். சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் அரேபியத்தீபகற்பத்தின் தென்பகுதியில் மொழியியல் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்ட லான்ட் பிரிஜ் எனும் நிருவனமும் அதிகளவிலான கையெழுத்துப்பிரதிகளை திரட்டியது.

அரேபிய இஸ்லாமிய விடயங்களை அறிவதில்  ஜரோப்பாவிலும்  ஜேர்மனியிலும் பேர்லின் பல்கலைக்கழகத்தில் காணப்படும் இந்த ஆவனங்களின் பங்களிப்பு

அரேபியா பற்றிய விடயங்களை அறிவதில் பேர்லின் பல்கலைக்கழகத்தில் காணப்படும் கையெழுத்துப்பிரதிகள் பல நூற்றாண்டுகளாகப் பெரும்பங்காற்றியுள்ளன. அரேபியரின் பண்பாடு அறிவு பற்றிய வரலாறு எனும் தலைப்பில் ஐந்து பாகங்கள் கொண்ட நூலை எழுதிய பிரபல கீழைத்தேய ஆய்வாளர் கார்ல் புரூக்ல்மன் தனது இந்த ஆய்வை இந்த நூலகத்தில்தான் ஆரம்பித்தார் என்பது இதற்கு சிறந்த உதாரணமாகும். இவர் அரேபிய இலக்கிய வரலாறு என்ற நுலை எழுதுவதற்கும் இங்குள்ள கையெழுத்துப்பிரதிகள் பெரும் துணையாகவிருந்துள்ளன.
கையெழுத்துப்பிரதிகளிலிருந்து ஆய்வாளர்கள் எவ்வாறு பயன்பெறுகின்றனர்?
பேர்லின் பல்கலைக்கழகத்தில் மொழியியல் ஆய்வுகளுக்கான பீடம் அரபு இஸ்லாமியா ஆய்வுகளுக்கான பீடம் என இரண்டு பீடங்கள் காணப்படுகின்றன. பல கையெழுத்துப்பிரதிகளை நேரடியாகப்பார்க்கும் வாய்ப்பு ஆய்வாளர்களுக்கு இங்கு கிடைக்கின்றது. ஏன்றாலும் பேர்லின் நூலகத்துக்கு வரும் ஆய்வாளர்கள் தமக்குத் தேவையான கையெழுத்துப்பிரதிகளைப் பெறவேண்டுமானால் நூலக நிர்வாகத்திடம் வேண்டுமிடத்து இரண்டு மாதங்களில் அவர்களுக்குத் தேவையான கையெழுத்துப்பிரதிகளின் நகல்கள் பிரதிபன்னப்பட்டு வழங்கப்படுகின்றன. இது மிகப்பெரும் சேவையெனலாம்.
எவ்வாறான கையெழுத்துப்பிரதிகள் பிரசுரிப்பதற்காகத் தேர்வு செய்யப்படுகின்றன?
இரண்டாம் உலகப்போருக்குப்பின்னர் புத்தகங்களை வெளியிட ஆரம்பித்த ஜேர்மனிய கீழைத்தேயவாதிகள் இது வரைக்கும் 20 வீதமான கையெழுத்துப்பிரதிகளையே புத்தகங்களாகப் பிரசுரித்துள்ளனர். முஸ்லிம்களின் அறிவியல் மூலதனங்களாவுள்ள இவற்றுள் எவ்வகையினை அச்சிட்டுப் பல பதிப்புக்களாக வெளியிடுகின்றனர் என்பது பற்றி ஆராயும் போதுதான் இவர்களின் இந்த வெளியீடுகள் தொடர்பாக சில சந்தேகங்கள் நமை ஆட்கொள்கின்றன. இஸ்லாமிய நாகரிகம் வீழ்சியடைந்து முஸ்லிமகள் பலவீனமுற்றிருந்த காலத்திலிருந்த இஸ்லாத்துக்கு முற்றிலும் முறனான சிந்தனைகளை விதைக்கும் கருத்துக்களைக் கொண்ட கையெழுத்துப்பிரதிகள்தாம் இவர்களால் நூலுருப்படுத்தப்படுகின்றன என்ற செய்தியே நமை வியக்க வைக்கின்றது. இது தொடர்பில் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் பல விடயங்கள் உலகுக்கு அம்பலமாகும் அதே வேளை மேற்குலகில் இஸ்லாம் பற்றித்தவறாக விதைக்கப்பட்டுள்ள கருத்துக்களை  இனங்கண்டு அவற்றுக்குத் தக்க பதில்களையும் வழங்க முடியும்.

தொடர்ந்து கணனியினை பயன்படுத்துபவரா நீங்கள்?




இன்றைய அன்றாட வாழ்க்கையில் கம்ப்யூட்டர்கள் நம் பணியினைப் பங்கு கொண்டு, நம் நடவடிக்கைகளை எளிதாக்கி வருகின்றன. ஒரு நாளில் பெரும்பாலான நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து பணியாற்றுகிறோம். பணி முடிந்து வீட்டுக்குத் திரும்புகையில், சற்று சோர்வுடனே இருக்கிறோம். “உங்களுக்கென்ன ஏ.சி. அறையில் தானே வேலை பார்க்கிறீர்கள்’ என்று மற்றவர்கள் சொன்னாலும், நம் உடம்பில் ஏற்படும் சோர்வும் வலியும் அதனால் தான் என்று என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா! உங்கள் மணிக்கட்டு வலியும், கண்களில் எரிச்சலும், முதுகில் எங்கோ சிறிய வலியும், இடுப்பிற்குக் கீழாக, உட்காரும்போதும் எழும்போதும் ஏற்பட்டு மறையும் தீவிரமான வலியும், கம்ப்யூட்டர் பயன்படுத்துவதால்தான் என்று உங்களுக்குத் தெரியுமா!
நாம் அமைத்துக் கொள்ளும் கம்ப்யூட்டர் அலுவலகச் சூழ்நிலைகளே இதற்குக் காரணங்கள். இவற்றைக் கொஞ்சம் இங்கு கவனிக்கலாம்.
முதலில் நாம் பார்க்க வேண்டியது, எப்போதும் நாம் உற்றுப் பார்த்துப் பணி புரியும் கம்ப்யூட்டர் மானிட்டர் தான். அது அமைக்கப்படும் விதம் தான். ஒரு மானிட்டர், அது சி.ஆர்.டியாக இருந்தாலும், எல்சிடி ஆக இருந்தாலும், உங்கள் முகத்திற்கு இணையாக அல்லது சற்றே தாழ்வாக இருக்க வேண்டும். மானிட்டரை பார்ப்பதற்காக உங்கள் தலையை சிறிது தூக்க வேண்டியதிருக்கையில் கழுத்தில் டென்ஷன் ஏற்படும்; உங்கள் முதுகுப் பகுதியின் மேல் புறத்தில் வலி உண்டாகும். இந்நிலை தொடரும் பட்சத்தில் நிச்சயமாய் இந்த வலிகள் நிலையாக இருக்கத் தொடங்கும். எனவே இதனை தவிர்ப்பதுடன் கீழ்க்காணும் நிலைகளையும் உருவாக்குங்கள். உங்கள் கண்களுக்கும் திரைக்கும் இடையேயான தூரம் 18 அங்குலமாக இருக்கட்டும். இது உங்கள் மானிட்டர் திரையின் அகலத்தைப் பொறுத்து சற்று ஏறத்தாழ இருக்கலாம்.
ஸ்கிரீனை சற்று சாய்த்துவைப்பதாக இருந்தால் அது உங்கள் கண்களின் பார்வைக் கோட்டில் இருக்க வேண்டும். திரையின் ரெசல்யூசன் உங்கள் பார்வைக்கு உகந்ததாக இருக்க வேண்டும். எனவே அதனை அவ்வப்போது மாற்றி எது கண்களுக்கு உகந்தது என்று தீர்மானித்து அதனையே வைத்துக் கொள்ளவும். மேலும் மானிட்டர் திரையில் எதற்காக அத்தனை ஐகான்கள். சற்று குறைக்கலாமே. அவ்வப்போது தேவைப்படாததை, பயன்படுத்தாததை நீக்கலாம்; அல்லது ஒரு போல்டரில் போட்டு வைக்கலாம். ஸ்கிரீன் மீது வைத்துப் பயன்படுத்தப்படும் ஸ்கிரீன் பில்டர் உங்கள் கண்களில் எரிச்சல் உண்டாக்குவதைத் தடுக்கும். உங்கள் சிஸ்டத்தில் நீங்கள் பயன்படுத்தும் கலர் ஸ்கீம் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. பலவகையான வண்ணக் கலவைகளை அமைத்துப் பார்த்து எது உகந்ததாக உள்ளதோ அதனை அமைக்கவும். வண்ணம் மட்டுமின்றி எழுத்துவகையினையும் உறுத்தாதவகையில் அமைக்கவும்.
மானிட்டரைப் பார்த்துவிட்டோம். இனி உங்கள் கைகளுக்குள் கம்ப்யூட்டருக்கான மந்திரக் கோலாகத் தவழும் மவுஸைப் பார்க்கலாம். எளிதில் அதனை அடைந்து கைகளுக்கு வலி எடுக்காவண்ணம் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். உடம்பைச் சாய்க்காமல் அதனை சுழற்றிப் பயன்படுத்தும் வகையில் அருகே அதிக இடத்துடன் இருக்க வேண்டும். கீ போர்டு வைக்கப்பட்டிருக்கும் சிறிய இழுவை டிராவில் வைப்பதனை அறவே தவிர்க்கவும்.
மவுஸ் கையாளும் அதே அளவில், அல்லது அதற்கும் மேலாக நாம் கீ போர்டினைப் பயன்படுத்துகிறோம். உங்கள் கீ போர்டினைச் சரியாக அமைப்பது உங்கள் மணிக்கட்டு மற்றும் முழங்கை வலியை வரவிடாமல் தடுக்கும். கீ போர்டில் டைப் செய்கையில் உங்களுடைய மணிக்கட்டு நேராக இருக்க வேண்டும். முழங்கைகள் 90 டிகிரி கோணத்தில் வளைந்திருக்க வேண்டும். இது உங்கள் நாற்காலியின் நிலையைச் சார்ந்து அமைக்கப்பட வேண்டும்.
இவை எல்லாம் கம்ப்யூட்டருடன் இணைந்தவை. இவற்றை நீங்கள் எங்கிருந்து இயக்குகிறீர்கள். நிச்சயமாய் உங்கள் நாற்காலிகள் தான். பல ஆயிரம் அல்லது லட்சம் செலவழித்து கம்ப்யூட்டர்களை வாங்கி, அவற்றை ஏசி அறையில் வைத்திடும் அலுவலகங்கள், அதனை இயக்குபவர்கள் பழைய வகை நாற்காலியிலேயே அமரட்டும் என விட்டுவிடுவார்கள். அங்குதான் பிரச்சினையே தொடங்குகிறது. நீங்கள் அமரும் நாற்காலி எப்படி இருக்க வேண்டும்? உங்களுடைய பாதம் தரையில் நன்கு பதிந்திருக்கும் வகையில் நாற்காலி அமைக்கப்பட வேண்டும். இதனால் உங்கள் தொடைகளின் பின்புறத்தில் வலி ஏற்படாமல் இருக்கும். நாற்காலியின் குஷன் மிருதுவாக மட்டுமின்றி உறுதியாகவும் இருக்க வேண்டும். அமரும் சீட் தரைக்கு இணையாக இருக்க வேண்டும். சரியாக அமருவதற்காக முன்பக்கம் அல்லது பின்பக்கம் சாயக்கூடாது. நாற்காலி நன்றாக தரையில் அமர்ந்திட நான்கு அல்லது ஐந்து கால்களில் இருக்க வேண்டும்.
அடுத்ததாகச் சுற்றுப்புறச் சூழ்நிலை. ஒரேயடியாக வெளிச்சம் அல்லது குறைவான வெளிச்சம் என இருவகைகளில் ஒளியூட்டப்பட்ட கம்ப்யூட்டர் அறைகளே இப்போது உள்ளன. எங்கு பாய்ண்ட் இருக்கிறதோ அங்கு மின்விளக்குகளை அமைத்துவிடுகின்றனர். இது தவறு. இருக்கின்ற விளக்கு ஒளி போதும் என்ற எண்ணம் எப்போதும் ஏற்படக்கூடாது. முடிந்தால் குழல் விளக்கு ஒளி இருக்க வேண்டும். விளக்கொளி உங்கள் தோள் மற்றும் தலைக்கு மேலாக இருக்க வேண்டும்; ஆனால் சரியாக உங்கள் பின்னாலிருந்து ஒளி வரக்கூடாது. உங்கள் மானிட்டர் திரைக்குப் பின்னாலிருந்து ஒளி வரும் வகையில் அமைக்கக்கூடாது. பொதுவாக நிலையாக அமைக்கப்பட்டிருக்கும் விளக்குகளை மாற்றுவது கடினம். எனவே மானிட்டரின் நிலையை மாற்றலாம். மானிட்டரை சிறிது இறக்கி ஏற்றலாம். அல்லது விளக்கு ஒளியை வடி கட்டி கிடைக்குமாறு ஷேட்களை அமைக்கலாம். ஒளியைப் படிப்படியாகக் குறைக்கும் டிம்மர் ஸ்விட்ச் கொண்டு ஒளியைத் தேவைப்படும் அளவிற்குக் குறைத்து அமைக்கலாம். நேரடியாக ஒளி கிடைக்காமல் மறைமுகமாகக் கிடைப்பது இன்னும் நன்றாக இருக்கும்.
பொதுவாக நம்மைப் பார்க்க வருபவர்கள் இல்லாமல், பக்கத்து சீட் நண்பர்களிடம் பேசாமல் பணியாற்ற கம்ப்யூட்டர் உதவுகிறது. இருப்பினும் பல கம்ப்யூட்டர் அறைகளில் தேவையற்ற சத்தம் இருந்து கொண்டே இருக்கிறது. கம்ப்யூட்டருடன், அதன் புரோகிராமுடன் நாம் ஒரு சவாலுடன்தான் பணியாற்று வோம். அந்நிலையில் கூடுதலாகச் சத்தம் இருந்தால் நம் பணி ஒழுங்கு முறை கெட்டுவிடும். சரியான ஒலி நமக்கு பணியில் உற்சாகத்தைக் கொடுக்கும். சிறிய அளவில், மனதிற்கு அமைதி அளிக்கும் இசையை, அறையில் கசிய விடலாம். அல்லது அவை எதுவும் இல்லாமல், அமைதியைப் பேணலாம். இது அங்கு பணியாற்றுபவர்களின் விருப்பத்தைப் பொருத்து அமைக்கப்பட வேண்டிய விஷயமாகும்.
செலவு மிச்சம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல அலுவலகங்களில் ஏர் கண்டிஷனிங் இல்லாமல் மின்விசிறி மட்டும் கொண்டு சில கம்ப்யூட்டர் அலுவலகங்கள் இயங்குகின்றன. இந்தியாவின் நம்பர் ஒன் என்று பெயரெடுத்த சாப்ட்வேர் நிறுவனத்தில், செலவைக் குறைப்பதற்காக இன்றும் இரவில் ஏர் கண்டிஷனர் இயங்குவதை நிறுத்திவிடுவதாக என் நண்பர் ஒருவர் கூறினார். இது மோசமான ஒரு நிலையை அங்கு பணியாற்றுபவர்களுக்கு மட்டுமின்றி, மேற் கொள்ளப்படும் வேலைக்கும், அங்கு பயன் படுத்தப்படும் கம்ப்யூட்டர்களுக்கும், அதில் கையாளப்படும் டேட்டாவிற்கும் உருவாக்கும். எனவே வெப்பம் மிகுதியான நம் ஊரில் கூடுமானவரை கம்ப்யூட்டர்கள் பயன்படும் இடத்தில் குறைந்த வெப்பம், அல்லது சற்று மிதமான குளிர் சீதோஷ்ண நிலை இருப்பது உகந்தது.
அதே நேரத்தில், அறைக்குள் வெளியிடப்படும் குளிர் காற்று நேரடியாகக் கம்ப்யூட்டர்கள் மீதோ, அல்லது அவற்றை இயக்குபவர் மீதோ படுவதனையும் தவிர்க்க வேண்டும். இறுதியாகவும் மிகவும் முக்கியமானதாகவும் நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், நீங்கள்தான். நேராக நிமிர்ந்து உட்காருங்கள். முதுகை வளைத்து மானிட்டரை உற்று நோக்கி உட்காராதீர்கள். சரியாக அமர்வது பின் முதுகு வலியைத் தவிர்ப்பது மட்டுமின்றி உங்கள் மூளைக்கு ஆக்ஸிஜனைச் சீராக அனுப்பும். வசதியான ஆடைகளை அணியுங்கள். உடம்பைப் பிடிக்கும் ஆடைகள் உங்கள் வேலைப் பண்பினை மாற்றி தொய்வை ஏற்படுத்தும். அதே போல உங்கள் செருப்பு மற்றும் ஷூக்கள் கால்களைக் கடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
இறுதியாக நீங்கள் வேலை வேலை என்று அலைந்து கம்ப்யூட்டரே கதி என்று கிடப்பவரா? அப்படியானால் சற்று சோம்பேறியாக இருப்பதில் தவறில்லை. இடை இடையே நாற்காலியிலிருந்து எழுந்து வெளியே வந்து சற்று உடம்பை வளைத்து நிமிர்த்தி அதனை உற்சாகப்படுத்துங்கள். இதனால் உங்கள் மூளைச் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். உணர்ச்சிப் பாதிப்பு ஏற்படாது.
மாறிவரும் வாழ்க்கைச் சூழ்நிலைகளில் சிலவற்றை நம்மால் மாற்ற முடியாது. மின்சார ட்ரெயினில் கூட்டத்தில் பயணிப்பதைத் தவிர்க்க முடியாது. சிறிது நேரமாவது பஸ் நிறுத்தத்தில் நிற்பதை மாற்ற முடியாது. பயணம் செய்கையில் அடுத்தவர் மூச்சு நம் தோள்களிலும் கழுத்திலும் படுவதை விரட்ட முடியாது. கண் தெரியாத பிச்சைக்காரர் டப்பா மைக் வைத்துக் கொண்டு கர்ண கடூரமாக பாடுவதைத் தடுக்க முடியாது. இரு சக்கர வாகனத்தில் செல்கையில் முன் செல்லும் வாகனப் புகையை சுவாசிப்பதைத் தடுக்க முடியாது. சுட்டெரிக்கும் வெயிலில் பச்சை விளக்குக்காய் சிக்னலில் காத்திருக்கும் சிக்கலை தவிர்த்திடவே முடியாது. ஆனால் கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில் மேலே சொன்ன அனைத்து வழிகளையும் கடைப் பிடித்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள முடியும்.

வெள்ளிக்கிழமை மரணம்

September 1, 2010
வெள்ளிக்கிழமையில் மரணிப்பதும் திங்கட்கிழமையில் மரணிப்பதும் நல்ல மரணத்தின் அடையாளங்களில் ஒன்றாக நம்பப்படுகிறது.
“வெள்ளிக் கிழமை யார் மரணிக்கின்றாரோ அவர் கப்று வேதனையிலிருந்த பாதுகாக்கப்படுவார்.” என்று நபிகளார் கூறியதாக சில அறிவுப்புக்கள் காணப்படுகின்றன.
திர்மிதியிலே 1074 என்ற இலக்கத்திலும் அஹ்மதில் 6582 என்ற இலக்கத்திலும் அப்துல்லாஹ் இப்னு அம்ர் வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அறிவிப்பாளர் தொடரில் ரபீஆ இப்னு ஸைப் மனனத்தில் பலஹீனமானவர். இவரை இமாம் புகாரி நஸாஈ போன்றோர் விமரிசித்துள்ளனர்.(தஹ்தீப் 3-256) இதே கருத்தில் இன்னொரு அறிவிப்பு அஹ்மதில் 6646 அப்துல்லாஹ் இப்னு அம்ர் வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அறிவிப்பாளர்களில் இடம்பெறும் அபூ குபைல் பலஹீனமானவர் என ஸாஜி மற்றும் இப்னு மஈன் விமரிசித்துள்ளனர் அவரது மாணவரான முஆவியா இப்னு ஸஈத் யாரென்று அறியப்படாதவர்.(பார்க்க: தஹ்தீப் )
திங்கட்கிழமை மரணம் சம்பந்தமாக எந்த ஹதீஸ{ம் இல்லை. “அபூபக்ர் ரலியல்லாஹ் அன்ஹ் அவர்கள் மரணிக்கும் போது நபியவர்கள் எந்த நாள் மரணித்தார்கள்? என்று வினவினர். திங்கட்கிழமை என ஆயிசா ரலியல்லாஹ் அன்ஹா பதிலளித்தனர். இது என்ன நாள்? என்று வினவினார்கள். திங்கட்கிழமை என்று ஆயிசா ரலியல்லாஹ் அன்ஹா பதிலளித்தனர். எனது மரணம் இரவிற்குள் நிகழவேண்டும் என எதிர்பார்க்கிறேன். என்று அபூபக்ர் ரழியல்லாஹ் அன்ஹ் அவர்கள் பதிலளித்தார்கள். இந்த செய்தி புகாரியில் 1387 திங்கட்கிழமை மரணம் என்ற தலைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் திங்கட் கிழமை  மரணிப்பதற்கு அபூபக்ர் ஆசை வைத்தார்கள் என்பதைத்தவிர வேறு செய்திகள் இல்லை.
எந்த நாளில் மரணிப்பது என்பதை வைத்து இஸ்லாம் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று பிரிக்கவில்லை. எந்த நிலையில் மரணிக்கிறோம் என்பதே முக்கியம். அல்லாஹ் நம்மனைவரையும்  அவனை அஞ்சிய நிலையில் உயிர் பிரியச் செய்வானாக.

Technology

Template Updates

Entertainment

Label 1

News World

 
Copyright © 2011. இஸ்லாமிய வரலாறு . All Rights Reserved
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template modify by Creating Website. Inspired from CBS News